close
Choose your channels

'வெல்டன் அண்ணாத்த': ரஜினியின் அரசியல் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல தயாரிப்பாளர்!

Thursday, July 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விடுவதாகவும் இனிமேல் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று கூறியதற்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக இருந்தர் கேடி குஞ்சுமோன் என்பவர் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பதாவது: ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு என்ற முடிவும், அரசியலுக்கு அவர் வரப்போவதில்லை என்று எடுத்த முடிவும் என்னை போன்ற ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ரஜினிகாந்த் வருடத்துக்கு இரண்டு படங்களில் நடித்தால் தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், சினிமா தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ் சினிமாவே சிக்கலில் இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் சரியான முடிவு எடுத்துள்ளார். இனி அவர் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார். ரஜினிகாந்த் நடித்த ’மூன்று முகம்’ ’படிக்காதவன்’ ’தங்கமகன்’ ’ஊர்காவலன்’ போன்ற படங்களை நான் வெளியிட்டு உள்ளேன். என்னை போலவே ரஜினிகாந்தின் படங்களால் பலர் லாபம் அடைந்துள்ளனர்

எனக்கும் ரஜினிக்கும் 40 ஆண்டுகால பழக்கம் உள்ளது. அவர் ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப்புதையல். ரஜினி என்ற பொக்கிஷத்தை அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அவர் பூரண உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் நலத்துடன் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன். சினிமாவில் சிகரமாக இருக்கும் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வெல்டன் அண்ணாத்த என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos