close
Choose your channels

என்னை வாய மூடிட்டு இருக்க சொன்னாங்க: 'மண்டேலா' 100வது விழாவில் யோகிபாபு

Thursday, July 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்தின் நூறாவது நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இந்த வெற்றி விழாவில் யோகி பாபு கேக் வெட்ட, அனைவரும் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினார்கள்

இந்த படம் குறித்து யோகிபாபு கூறியபோது, ‘இந்த படம் தியேட்டருக்கு வந்திருந்தால் நான் மிகவும் சந்தோசப்பட்டு இருப்பேன் என்றும் ஆனால் ஓடிடியில் வந்ததிலும் ஒரு பிளஸ் இருக்கின்றது என்றும் இந்த படத்தை பார்த்து அனைத்து மாநிலங்களிலிருந்தும் எனக்கு வாழ்த்துக்கள் வந்தது என்றும் கூறினார்

மேலும் இந்த படத்தை பொறுத்தவரை நான் இடையிடையே கவுண்டர் அடிப்பேன் என்றும், ஆனால் தயவுசெய்து வாயை பொத்திக் கொள்ளுங்கள் இந்த படத்தில் நீங்கள் அமைதியாக இருந்தாலே போதும் என்று இயக்குனர் என அறிவுறுத்தினார் என்றும், அவர் சொன்னது போலவே நடித்த்தால், படம் அவர் நினைத்தது போலவே வந்து விட்டது என்று யோகிபாபு கூறினார்

மேலும் இந்த படத்தின் வெற்றி அனைத்துக்கும் இயக்குனரே காரணம் என்றும் அவருக்கு நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் இந்த படத்தில் பணிபுரிந்த படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று யோகிபாபு கூறினார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.