close
Choose your channels

இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் புனித் ராஜ்குமார் பதிவு செய்த வாழ்த்து டுவிட்!

Saturday, October 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் அவர் இறப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் தனது சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு நேற்று காலை 11:30 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரு சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவால் கன்னட திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரை உலகமே சோகத்தில் மூழ்கியது என்பதும் பிரதமர் மோடி உள்பட பல அரசியல் பிரபலங்களும் திரை உலக பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இறப்பதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்னர் ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்த புனித் ராஜ்குமார், மறுநாள் தனது சகோதரர் சிவராஜ் குமாரின் ’பஜ்ரங்கி 2’ என்ற படம் வெளியாவதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட்டை பதிவு செய்த ஒரு சில நிமிடங்களில் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்கு இன்று அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவருடைய உடலுக்கு ரசிகர்கள் விடிய விடிய வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.