close
Choose your channels

ஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்!

Sunday, April 18, 2021 • தமிழ் Comments

ஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு முகமெல்லாம் வீங்கி விபரீதம் ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரைசா வில்சன் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களால் கவரப்பட்டு வைரலாகும் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் ரைசா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் அவரது முகமெல்லாம் வீங்கி காணப்படுகிறது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியபோது, ‘நேற்று எளிமையான ஃபேசியல் செய்வதற்காக அழகுக்கலை மருத்துவரிடம் சென்றேன். ஆனால் அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் என்னை வலுக்கட்டாயமாக வேறு சில அழகு செயல்முறைகளை எடுத்து கொள்ள என்னை கட்டாயப்படுத்தினார். அதனுடைய விளைவு தான் இது என்று தன்னுடைய முகமெல்லாம் வீங்கிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

மேலும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவர் தன்னை சந்திக்கவும் பேசவும் மறுப்பதாகவும் அவருடைய உதவியாளர்களிடம் கேட்டபோது அவர் வெளியூர் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz