close
Choose your channels

இஷா அம்பானி திருமண நிகழ்ச்சியில் ரஜினி: சிறப்பான வரவேற்பு

Thursday, December 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் நேற்று மும்பையில் மிக ஆடம்பரமாக நடைபெற்றது. இந்த திருமணத்தின் நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத்தலைவர்கள் வரை கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவி லதா ரஜினியுடன் நேற்று மும்பை சென்றார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இஷா அம்பானிக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நேற்று 69வது பிறந்த தினம் என்பதால் திருமணத்தில் கலந்து கொண்ட முக்கிய விஐபிக்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.