close
Choose your channels

எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதில் இந்த நடிகரா? வில்லனை ஹீரோவாகும் இயக்குனர் ராஜூமுருகன்..!

Sunday, March 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக வில்லன் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

தமிழ் திரையுலகில் ’குக்கூ’ ‘ஜோக்கர்’ ’ஜிப்சி’ மற்றும் ’ஜப்பான்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் அடுத்ததாக ஒரு திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் நாயகன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடிப்பார் என்று சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் இதில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க வேண்டிய கேரக்டரில் ’கைதி’ ’மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாகவும் அவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் வில்லனாகவும், ‘அநீதி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அர்ஜுன் தாஸ், தற்போது மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.