close
Choose your channels

சாம்ஜோன்ஸ் தயாரித்து நடிக்கும் படத்தில் பிரபல நடிகை: டைட்டில் அறிவிப்பு!

Tuesday, February 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ஏமாலி’, ‘லிசா’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர் சாம்ஜோன்ஸ் தற்போது ஒரு திரைப்படத்தை தயாரித்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாமரைச்செல்வன் என்பவர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி இந்த படத்தை தனது மாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் சாம்ஜோன்ஸ். இந்த படத்திற்கு ’நதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சாம்ஜோன்ஸ் ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சுரேகா வாணி, முனிஸ்காந்த், வேலராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ். உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

இந்த படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் என்பவர் இசை அமைத்து வருகிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் ’கனா’ படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை தேனி உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.