close
Choose your channels

ஆசிரியர் தினத்தில் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ள குசும்பு வீடியோ!

Thursday, September 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா முழுவதும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கே.பாக்யராஜ் நடித்த ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் வயதானவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை வேடத்தில் நடித்த நடிகை தீபா, வயதான பெரியவர்களின் கையை பிடித்து ‘அ’ எழுத சொல்லும் காட்சி ஒன்று இருக்கும். இந்த காட்சியில் பாடம் படிக்க வந்த வயதானவர்கள் தீபாவை பார்த்து ஜொள்ளுவிடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வீடியோவைத்தான் சாந்தனு பாக்யராஜ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஆசிரியர்கள் இந்த தினத்தில் கவுரவிக்கப்பட்டு வரும் நிலையில் சாந்தனு குசும்புத்தனமாக வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பு குவிந்து வருகிறது. இருப்பினும் ஒருசிலர் சாந்தனுவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.