close
Choose your channels

நீச்சல் குளத்தில் மிதந்தபடி புத்தகம் படிக்கும் தனுஷ் நாயகி: வைரலாகும் புகைப்படம்

Sunday, September 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடித்து வரும் நடிகை ஒருவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் மிதந்தபடி புத்தகம் படிக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான். இவர் மறைந்த நடிகர் சுஷாந்த்சிங் நடித்த கேதார்நாத் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஒரு சில இந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இவர் தனுஷ் நடித்து வரும் பாலிவுட் திரைப்படம் ‘அட்ரங்கி ரே’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இந்த படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு விரைவில் மதுரையில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாரா அலிகான் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் ஜாலியாக உட்கார்ந்தபடி புத்தகம் படிக்கும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிகினி உடையில் புத்தகம் படிக்கும் அவரது இந்த புகைப்படத்தை ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர். மேலும் பல்வேறு விதமான ஜாலியான கமெண்ட்டுகளையும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பதும், அவருடைய புகைப்படத்தை விட ரசிகர்களின் கமெண்ட்டுகள் ரசிக்கும்படியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.