close
Choose your channels

'உன் அம்மாவை நீ திரும்பவும் பாக்கணுமா? அமலாவின் 'கணம் 'டிரைலர்

Friday, September 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலா முக்கிய வேடத்தில் நடித்த ‘கணம்’ என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

ஷர்வானந்த், ரிது வர்மா, அமலா, சதீஷ், உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கணம்’. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ளது

இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த டிரைலரில் அம்மா - மகன் சென்டிமென்ட் காட்சிகள் அசத்தலாக இருப்பதால் இந்தப் படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. , சுஜித் சரங் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.