close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீடு: கமல், சிம்புவை அழைத்து வர பிரமாண்ட ஏற்பாடு!

Friday, September 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது.

இதற்காக வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த விழாவிற்கு உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகன் சிம்பு மற்றும் சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் பிரமாண்டமான முறையில் அழைத்து வர வேண்டும் என்று வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே கமல், சிம்பு ஆகிய இருவரும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திற்கு ஹெலிகாப்டரில் வர இருப்பதாக வெளிவந்த தகவல் கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.