close
Choose your channels

என் ஓட்டு அவருக்குத்தான்: ஸ்ருதிஹாசனின் டுவீட்

Friday, April 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் மக்களவை தேர்தலில் ஒருசில சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து 40 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடி அவர் தமிழக முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தனது வேட்பாளர்கள் குறித்தும், அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்பது குறித்தும் குறிப்பிட்டு தனது சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவற்றில் சற்றுமுன் அவர் ஆவேசமாக பேசி டிவியை ரிமோட்டால் உடைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோ குறித்து அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் கூறியபோது, 'உங்களை நினைத்து பெருமப்படுகிறேன் அப்பா. என்னுடைய ஓட்டு எப்போதுமே உங்களுக்குத்தான்' என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த டுவீட்டுக்கு பெரும்பாலான பாசிட்டிவ் கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.