close
Choose your channels

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' டீசர் ரிலீஸ் எப்போது?

Saturday, December 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியிட வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீஸர் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற இருப்பதாகவும் இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் அனேகமாக வரும் ஜனவரி மாதம் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சிம்பு மற்றும் கௌதம் மேனன் மீண்டும் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு ஜோடியாக கயடு லோஹர் என்பவர் நடித்து வரும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.