close
Choose your channels

பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல்!

Thursday, July 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு தற்போது கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். நார்தன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சிம்பு வெங்கட் பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள உள்ளார். அதுமட்டுமின்றி ஹன்சிகாவின் 'மஹா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு தற்போது நடிகர் சித்தார்த் நடித்து வரும் படம் ஒன்றுக்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடல் நேற்று ஒளிப்பதிவு செய்யப்பட்டது. சிம்புவும் பாடகி சஞ்சனாவும் இணைந்து பாடிய இந்தப் பாடல் சிறப்பாக வந்திருப்பதாகவும், இந்த பாடல் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் படக்குழுவினர் கூறினர். ஏற்கனவே சிம்பு பல நடிகர்களுக்காக பாடல்கள் பாடியுள்ள நிலையில் தற்போது சித்தார்த் நடிக்கும் படத்திற்கும் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.