close
Choose your channels

பிரபல நடிகரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சிம்பு: வைரல் புகைப்படங்கள்

Wednesday, April 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர் ஒருவருக்கு நடிகர் சிம்பு இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவத்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

தமிழ் திரையுலகின் இளைய துறை நடிகர்களில் ஒருவர் ஜெய். இவர் தற்போது பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, குற்றமே குற்றம், சிவசிவா உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஜெய் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் தனது வீட்டில் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத வகையில் திடீரென நடிகர் சிம்பு அவரது வீட்டிற்கு வருகை தந்து வாழ்த்து தெரிவித்தார். சிம்புவின் வருகையை  எதிர்பாராத நடிகர் ஜெய் ஆச்சரியம் அடைந்து அவரை வரவேற்று அவரது முன் பிறந்த நாள் கேக்கை வெட்டினார். 

இதுகுறித்து ஜெய் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இது முற்றிலும் எதிர்பாராத மற்றும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. சிம்பு அவர்கள் என்னுடைய வீட்டிற்கு வருகை தந்து வாழ்த்து தெரிவிக்க நேரத்தை எடுத்துக்கொண்டது, என்னுடைய பிறந்தநாளை அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இந்த ஆண்டு எனது பிறந்தநாளை சிறப்புக்குரிய பிறந்த நாளாக மாறிய சிம்புவுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜெய் பிறந்த நாளன்று சிம்பு வருகை தந்த புகைப்படம், கேக் வெட்டிய புகைப்படம் ஆகியவை வைரல் ஆகி வருகின்றன 

மேலும் சிம்பு நடித்த ’இது நம்ம ஆளு’ ’வாலு’ ஆகிய படங்களில் ஜெய் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் என்பதும் ஜெய் நடித்த ’கோவா’ திரைப்படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.