close
Choose your channels

'பேட்ட' படத்தை அடுத்து சிம்ரன் நடிக்கும் புதிய படம்

Friday, January 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் ரஜினியின் காதலியாகவும் மேகா ஆகாஷ் தாயாகவும் நடித்திருந்த சிம்ரனுக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 'பேட்ட' படத்தை அடுத்து தற்போது அவர் மாதவன் நடித்து வரும் 'ராக்கெட்டரி' படத்திலும் நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மாதவன் நடித்த 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'பார்த்தாலே பரவசம்' ஆகிய படங்களில் சிம்ரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994ஆம் ஆண்டு தவறான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பல வருடங்கள் சிறையில் இருந்த உண்மைக்கதைதான் 'ராக்கெட்டரி' என்ற படத்தின் கதை. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.