close
Choose your channels

ஒரே நாளில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் - விஜய் ஆண்டனி திரைப்படங்கள்!

Wednesday, April 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் திரையுலகில் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டாக்டர்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் காரணமாக அந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படம் ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள ’கோடியில் ஒருவன்’ என்ற திரைப்படமும் அதே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் முதன்முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கோலிவுட் திரையுலகில் கூறப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் வசூல் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.