close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'ரெமோ' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, May 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ரெமோ' படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 'ரெமோ' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தீம் மியூசிக் வெளியீடு குறித்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தீம் மியூசிக் வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். பெண் கெட்டப் உள்பட நான்கு வித்தியாசமான கெட்டப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.