close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த பட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

Friday, December 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கி வரும் 'எஸ்கே 13' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே.

இந்த படத்தில் 'வேலைக்காரன்' படத்திற்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்து வருகிறார். ராதிகா சரத்குமாரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளது. அதில் சிவகார்த்திகேயன் அஜர்பைஜான் நாட்டில் ஒரு குழந்தையுடன் இருப்பது போன்று உள்ளது. எனவே 'எஸ்கே 13' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருவது உறுதியாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'ஜித்து ஜில்லாடி' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.