close
Choose your channels

'சிவகார்த்திகேயன் 15' படத்தின் நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு

Tuesday, February 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ''Mr லோக்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் மே 1ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் மற்றும் 'இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ஆகியோர்களது இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் - மித்ரன் இணையும் படத்தின் நாயகி குறித்த தேர்வு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த படத்தில் தேசியவிருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏம் ஸ்டுடியோ நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்யாணிக்கு இது முதல் தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்சன்கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.