close
Choose your channels

ஜிவி பிரகாஷ் வெளியிட்ட 'சூரரை போற்று' படத்தின் 5 நிமிட வீடியோ!

Saturday, October 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரை போற்று’திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஐந்து நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘சூரரை போற்று’படத்தின் மேக்கிங் வீடியோவான இந்த வீடியோவில் இந்த படத்தில் நடிக்கும் போது தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து சூர்யா சில விஷயங்களை கூறியுள்ளார்

6000 ரூபாயை கையில் வைத்துக் கொண்டு ஒருவர் ஏர்லைன்ஸ் ஆரம்பிக்கப் போகிறார் என்று கூறினால் யாராவது நம்புவார்களா? என்று சூரியா கூறியது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது

5 நிமிடங்கள் ஓடும் இந்த மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’மேக்கிங் ஆப் மாறா’ என்ற வீடியோ வெளிவந்த நிலையில் அந்த வீடியோவின் இரண்டாம் பாகமாக இந்த வீடியோ உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos