close
Choose your channels

'ஜெயிலரை அடுத்து சன் பிக்சர்ஸ் அடுத்த படத்தின் ஹீரோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு!

Wednesday, January 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ என்ற திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இது தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை தனுஷ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனுசு ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்துள்ளனர். மேலும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள ’D50’ என்ற போஸ்டரில் தொழிற்சாலையில் இருந்து பெரும்புகை வெளியாகி அந்த பகுதியில் வாழும் பொதுமக்களின் சுற்றுச்சூழலை அழிக்கும் வகையில் இருப்பதால் இதுவொரு முக்கிய பிரச்சனையை அலசும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் ஐம்பதாவது படத்தை அவரே இயக்குவாரா? அல்லது வேறு இயக்குனர் இயக்குவாரா? இந்த படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட்டுகள் என்னென்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தனுஷ் தற்போது ’வாத்தி’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் அவர் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.