close
Choose your channels

'நான் சாகக்கூடாதுன்னு விதி என்னை விட்டுவச்சுருக்கு.. சுந்தர் சியின் 'தலைநகரம் 2' டீசர்

Thursday, December 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி நடித்த ’தலைநகரம்’ என்ற திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான நிலையில் 16 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீஸர் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்பட பல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சுராஜ், தலைநகரம்’ படத்தை இயக்கிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை துரை இயக்கியுள்ளார். இவர் அஜித் நடித்த ’முகவரி’ சிம்பு நடித்த ’தொட்டி ஜெயா’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த டீசர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சுந்தர் சி ஜோடியாக பாலக் லால்வானி நடித்துள்ள இந்த படத்தில் தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள இந்த படம் சுதர்சன் படத்தொகுப்பில் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ரைட் ஐ தியேட்டர் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.