close
Choose your channels

அஜித்தின் 'துணிவு' திரைப்படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா?

Wednesday, December 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் இடம்பெற்ற ’சில்லா சில்லா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் இந்த படத்தில் இடம்பெற்ற ’காசேதான் கடவுளடா’ என்ற பாடல் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ‘துணிவு’ திரைப்படம் வெளியாக கிட்டத்தட்ட ஒரு மாதம் இருக்கும் நிலையில் தற்போது வெளிநாடுகளில் உள்ள பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த முன்பதிவிலிருந்து அஜித்தின் ‘துணிவு’ திரைப் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் கசிந்து உள்ளதாக கூறப்படுகிறது. ‘துணிவு’ திரை படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் அதாவது 165 நிமிடங்கள் என தெரியவந்துள்ளது. இருப்பினும் சென்சார் ஆன பின்னரே இந்த படத்தின் சரியான ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.