close
Choose your channels

சுந்தர் சியின் 'அரண்மனை 4' படத்தின் சூப்பர் அப்டேட்..!

Thursday, April 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நான்காவது பாகம் உருவாகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் அவரே முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

மேலும் சுந்தர் சி ஜோடியாக ராஷி கண்ணா நடிப்பதாகவும், அவருடைய தங்கையாக பிரபல நடிகை தமன்னா நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முதல் ‘அரண்மனை 4’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொச்சியில் தொடங்கி இருப்பதாகவும், அதில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ’அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்கள் நல்ல வரவேற்பை பெற்றது போலவே இந்த நான்காவது பாகமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர், சி, தமன்னா, ராஷிகண்ணா, சித்தார்த், ஆண்ட்ரியா, கே பாக்யராஜ், மீனா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.