close
Choose your channels

'சுந்தரி' சீரியல் நடிகருக்கு திருமணம்.. மணமகளும் சீரியல் நடிகை தான்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Wednesday, March 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி’ சீரியலில் நடிக்கும் நடிகருக்கு இன்று திருமணம் ஆகி உள்ள நிலையில் மணமகளும் ஒரு சீரியல் நடிகை தான் என்பதை அடுத்து சின்னத்திரை உலகினர் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ரசிகர்களின் பேராதரவில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று 'சுந்தரி’. இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து கொண்டு இருப்பவர் அரவிஷ். இவர் இன்று கோவையில் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்தவரும் சீரியல் நடிகை தான் என்பதும் அவர் ’திருமகள்’ என்ற தொடரில் நாயகி ஆக நடித்துக் கொண்டிருக்கும் ஹரிதா என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையை சேர்ந்த அரவிஷ், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹரிதா ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இரு தரப்பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்..

கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ்களை பதிவிட்டு வந்த நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலையும் ஆரம்பித்து நடத்தி வந்தனர். இந்த சேனலில் இவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரவிஷ் -ஹரிதா திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை உலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.