close
Choose your channels

மாலத்தீவில் தலைவி சன்னிலியோன்…கிளாமர் புகைப்படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

Tuesday, January 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் வலம்வரும் நடிகை சன்னிலியோனிற்கு இந்தியா முழுக்கவே ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது சமீபத்தியப் புகைப்படங்கள் மில்லியன் கணக்கில் லைக்குகளைக் குவித்து இருப்பது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபகாலமாகத் திரைப்பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்குச் சென்றுவருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகை சன்னிலியோன் தற்போது மாலத்தீவு சென்றுள்ளார். மேலும் அங்குள்ள ஸ்பாக்களுக்கு சென்றும் கடற்கரையில் குளித்தும் தன்னடைய பொழுதை இனிமையாகக் கழித்து வருகிறார். அந்த வகையில் மாலத்தீவில் நடிகை சன்னிலியோன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை சன்னிலியோன் தற்போது தமிழில் இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில் “வீரமாதேவி“ திரைப்படத்திலும் யுவன் இயக்கத்தில் “OMG“ எனும் திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இதைத்தவிர மலையாளத்தில் “ரங்கீலா“ எனும் திரைப்படத்திலும் பாலிவுட்டில் “Anamika“ எனும் திரைப்படத்திலும் நடித்துவருகிறார். மேலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகை சன்னிலியோன் தனது பிசியான சினிமா நடிப்பிற்கு இடையே மாலத்தீவில் எடுத்துக்கொண்ட சில கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் ஒருசில புகைப்படங்கள் 11 லட்சத்தைத் தாண்டி லைக்ஸ்களைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.