close
Choose your channels

'கூண்டுல புயலுக்கு வேலையில்ல: 'அண்ணாத்த' சிங்கிள் பாடல்

Monday, October 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் சில வரிகள் தற்போது பார்ப்போம்.

அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு
அண்ணாத்த அண்ணாத்த வர நடையில உடையில கொல கொல மாஸு
கூண்டுல புயலுக்கு வேலை இல்ல
தாண்டி வா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்லை
துணிந்து வா கடவுளே துணை நமக்கு
உறுதியுடன் மோது மோது உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது வானையும் வளைக்கலாம்

அண்ணாத்த பேசுன ஸ்டைலு
அண்ணாத்த பாடுன ஸ்டைலு
அண்ணாத்தே ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.