close
Choose your channels

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் சூர்யாவா? ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளாரே!

Wednesday, May 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன் நடித்த ஒரு படத்தில் ஏற்கனவே சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது ‘விக்ரம்’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது .

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பதும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘பத்தல பத்தல’ என்ற வேற லெவல் குத்துப் பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகிய ஹீரோக்கள் நடித்த நிலையில் தற்போது சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளதாகவும், அவரது காட்சிகள் கிளைமாக்ஸில் வரும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி மே 15ஆம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் சூர்யாவும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக கமல்ஹாசன் நடித்த ’மன்மதன் அம்பு’ என்ற திரைப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.