close
Choose your channels

மனைவியை அடுத்து டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் ஹீரோ!

Tuesday, July 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் ஹீரோ ஒருவரின் மனைவி எம்.பிபிஎஸ் டாக்டர் என்ற நிலையில் தற்போது நடிகரும் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் திரைப்பட ஹீரோக்களில் ஒருவர் விமல் என்பதும் இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீடம், குருவி உள்பட ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த விமல் ’பசங்க’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.அதன்பின்னர் ’களவாணி’ ’தூங்கா நகரம்’ ’எத்தன்’ ’வாகை சூடவா’ ’கலகலப்பு’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக விமலுக்கு வெற்றிப் படங்கள் அமையவில்லை என்றாலும் கடந்த ஆண்டு வெளியான ’விலங்கு’ என்ற வெப்தொடர் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இதனை அடுத்து தற்போது 7 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் விமலின் மனைவி அக்சயா ஒரு டாக்டர் என்பதும் அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கர்ப்பமாக இருந்த போதும் விடுமுறை எடுக்காமல் நோயாளிகளுக்கு சேவை செய்ததால் அனைவரின் பாராட்டுக்களை பெற்றார்.

இந்த நிலையில் நடிகர் விமலுக்கு தற்போது அமெரிக்கன் நேஷனல் பிசினஸ் யுனிவர்சிட்டி என்ற அமைப்பு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியதை அடுத்து இது குறித்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். விமலின் மனைவி எம்பிபிஎஸ் டாக்டர் என்ற நிலையில் தற்போது விமலும் கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.