close
Choose your channels

கட்டணம் ரூ.100 மட்டுமே: ஏஜிஎஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் என்பது தெரிந்ததே. இந்த நிறுவனம் தயாரிப்பு மட்டுமின்றி பல திரைப்படங்களை விநியோகம் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மார்ச் 19-ஆம் தேதி அதாவது நாளை வெளியாக உள்ள ’தேன்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது என்பதும் தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தேன்’ திரைப்படம் ஒரு சிறப்பான திரைப்படம் என்பதால் அந்த திரைப்படம் அனைவரிடமும் செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு அதிரடி சலுகையை ஏஜிஎஸ் நிறுவனம் அளித்துள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் திரையரங்குகளில் பார்க்க வருபவர்களுக்கு நூறு ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது தான் குறிப்பிடதக்கது. கணேஷ் விநாயக் இயக்கியுள்ள இந்த படத்தில் புதுமுகங்கள் பலர் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.