close
Choose your channels

தல அஜித்தின் 'விஸ்வாசம்'' குறித்து புதிய அப்டேட்

Saturday, October 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் முடிந்துவிட வாய்ப்பு உள்ளதாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர்களிடம் இருந்து வந்த தகவலின்படி இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்துடன் முடிவடைந்துவிடும் என தெரிகிறது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் மும்பையில் நடைபெறவுள்ளதாகவும் தீபாவளிக்கு முன் அதாவது நவம்பர் முதல் வாரத்தில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் இரண்டே மாதங்களில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முழுவதையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.