close
Choose your channels

'தலைவர் 168' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்?

Wednesday, January 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தை இந்த ஆண்டு ஆயுத பூஜை தினத்தில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இயக்குனர் சிறுத்தை சிவா திட்டமிட்டபடி படத்தை சரியாக காலதாமதமின்றி முடித்துவிடுவார் என்பதால் தீபாவளி வரை இந்த படத்திற்காக காத்திருக்க தேவையில்லை என்றும் அதற்கு முன்னரே நிச்சயம் ’தலைவர் 168’ திரைப்படம் வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.