close
Choose your channels

ஹீரோவாகும் இன்னொரு பிரபல இசையமைப்பாளர்?

Monday, December 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்பட ஒரு சில இசையமைப்பாளர்கள் திரையுலகில் வெற்றிகரமான ஹீரோக்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்னொரு பிரபல இசை அமைப்பாளர் ஹீரோவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ உள்பட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஹீரோவாக முயற்சி செய்ததாக கூறப்பட்ட நிலையில் அப்போது அவர் அதனை மறுத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் விரைவில் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் தேவிஸ்ரீபிரசாத் ஹீரோவாகவும் ஜொலிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.