close
Choose your channels

படம் பார்க்காமலே பிரச்சார படம் என்பதா? கமலுக்கு பதிலடி கொடுத்த 'தி கேரளா ஸ்டோரி' இயக்குனர்..!

Wednesday, May 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற படத்தை விமர்சனம் செய்த உலகநாயகன் கமல்ஹாசன் ’நான் பிரச்சார படங்களை எதிர்ப்பவன் என்றும் உண்மை கதை என்று டைட்டில் இருந்தால் மட்டும் போதாது, அந்த படத்தில் உள்ள கதையில் உண்மையும் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குனர் படம் பார்க்காமலே இது பிரச்சார படம் என்பதா? என கண்டனம் தெரிவித்துள்ளார்

‘தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வசூல் ரூ.300 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் இந்த படத்துக்கு எதிர்ப்பு இருந்தபோதிலும் திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டது, ஆனால் உலகிலேயே இந்த படத்தை திரையரங்குகளில் திரையிட மறுத்தது தமிழகத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கமலஹாசன் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த போது ’பிரச்சார படங்களுக்கு நான் எதிரானவன், வெறுமனே இது உண்மை கதை என்று எழுதினால் மட்டும் போதாது, அந்த கதையில் உண்மையும் இருக்க வேண்டும். ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் காட்டப்பட்டது உண்மை அல்ல’ என்று விமர்சனம் செய்திருந்தார்

இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள இயக்குநர் சுதிப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை பிரச்சார படம் என்று கூறியவர்கள் படம் பார்த்த பிறகு தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர். படம் பார்க்காதவர்கள் தான் இன்னும் விமர்சனம் செய்து வருகின்றனர். படம் பார்க்காமலேயே அதை பிரச்சார படம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? இதுபோன்ற நபர்களுக்கு நான் பதில் சொல்வதை நிறுத்தி விட்டேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் பாஜகவினருக்கு ஒரு படம் பிடித்தது என்பதாலேயே அந்த படம் அவர்களுக்கான படம் என்று அர்த்தம் அல்ல, உலகம் முழுவதும் 37 நாடுகளில் உள்ள மக்கள் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர், அவர்களில் பலர் நேரடியாக என்னிடம் இந்த படம் குறித்து விமர்சனம் செய்தனர், அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் பாசாங்கு, அற்பத்தனம் உள்ள விமர்சனங்களுக்கு நான் விளக்கம் கொடுப்பதில்லை’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.