close
Choose your channels

ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

Friday, March 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் 'காப்பான்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஆர்யா, ஸ்டுடியோக்ரீன் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம். இந்த படத்தை இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்', 'டிக் டிக் டிக்' போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆர்யா, சக்தி செளந்திரராஜன், ஸ்டுடியோக்ரீன் இணையும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஆர்யா ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.