close
Choose your channels

கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' சென்சார் தகவல்கள்

Thursday, November 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பாடல்கள் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று காலை சென்னையில் நடந்தது.

இந்த நிலையில் இந்த படம் இன்று சென்சார் முடிந்து அதன் தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். 

இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படம் வரும் நவம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளதை தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை சதுரங்கவேட்டை' வினோத் இயக்கியுள்ளார்.  கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங், அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.