close
Choose your channels

முதல் பாகத்திற்கு ரஜினி-கமல்.. 2ஆம் பாகத்திற்கு இவரா? 'PS 2' படக்குழுவினர்களின் மாஸ் பிளான்..!

Thursday, March 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் ’பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யை அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை மணிரத்னம் இயக்க முடிவு செய்த போது வந்தியத்தேவன் கேரக்டரில் விஜய் தான் நடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் அந்த சமயத்தில் அந்த படம் சில பிரச்சனைகளால் உருவாகவில்லை.

இந்த நிலையில் ’பொன்னின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் விஜய் அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் எதிர்பார்த்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தளபதி விஜய் தற்போது தான் ’லியோ’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை வந்துள்ள நிலையில் அவர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos