close
Choose your channels

'PS 2' இசை வெளியிட்டு விழாவில் கமல்ஹாசனுடன் கலந்து கொள்ளும் பிரபல நடிகர்: ஆச்சரிய தகவல்

Wednesday, March 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலகநாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதோடு ட்ரெய்லரை வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு சில பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாக்குவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் உடன் வேறு சில முக்கிய பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி சிம்பு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. சிம்புவின் ’பத்து தல’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்று அவர் ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.