close
Choose your channels

என்னா அடி....மும்தாஜின் மேல் இவ்வளவு கோபமா ஐஸ்வர்யாவுக்கு?

Monday, August 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தயார் செய்யப்படும் நிலையில் சற்றுமுன் வெளியான புரமோவில் வீடியோவில் நாமினேஷன் படலம் குறித்த காட்சிகள் இருந்தன

இதில் இரண்டு இரண்டு பேர்களாக பிரிந்து ஒருவரை நாமினேஷன் செய்கின்றனர். இந்த நிலையில் கிட்டத்தட்ட அனைவருமே மும்தாஜை நாமினேஷன் செய்யும் முயற்சியில் இருப்பதாக புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

அதேபோல் மும்தாஜ், இந்த வாரம் ஐஸ்வர்யாவை நாமினேஷன் செய்கிறார். ஐஸ்வர்யா 12 வயது சிறுமி போல் நடந்து கொள்வதால் அவரை நாமினேஷன் செய்வதாக் மும்தாஜ் விளக்கமளிக்கின்றார். இதற்கு பதிலடியாக மும்தாஜ் 2 வயது குழந்தை போல் செயல்படுவதாக கூறிய ஐஸ்வர்யா, மும்தாஜ் படம் வரைந்த பானையை ஆத்திரத்துடன் உடைக்கின்றார். அடேயப்பா மும்தாஜ் மேல் இவ்வளவு கோபமா ஐஸ்வர்யாவுக்கு என்பது போன்ற கமெண்ட்டுக்கள் அதிகம் பதிவாகி வருகிறது.

இதுவரை பிக்பாஸ் புண்ணியத்தில் நாமினேஷனில் இருந்து தப்பித்து வந்த ஐஸ்வர்யா, இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறுவார் என்று கருதப்படுகிறது. பிக்பாஸின் தில்லுமுல்லு எதுவும் இல்லாமல் ஐஸ்வர்யா இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டால் நிச்சயம் அவரை பார்வையாளர்கள் வெளியேற்றுவார்கள் என்பது உறுதி. ஆனால் முதல் வாரத்தில் இருந்தே வாக்குகளின் அடிப்படையில் இல்லாமல் பிக்பாஸ் முடிவின்படியே எவிக்சன் முடிவு இருப்பதாக கூறப்படுவதால் என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.