close
Choose your channels

த்ரிஷாவுக்கு முத்தம் கொடுத்தவர் யார் தெரியுமா? அவரே வெளியிட்ட வீடியோ

Sunday, November 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷாவுக்கு லிப்கிஸ் கொடுத்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா என்பதும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கேரக்டருக்கு அவரை விட்டால் வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார் என்ற அளவுக்கு அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது என்று விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் த்ரிஷாவுக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு சின்ன குழந்தை தனது போஸ்டருக்கு உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சியின் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ள நிலையில் ஏராளமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.