close
Choose your channels

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு: ஆர்வத்தை தூண்டும் ஃபர்ஸ்ட்லுக்!

Sunday, November 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த ‘மண்டேலா’ என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யோகி பாபு நடித்த ’ட்ரிப்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்திலும் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ’தூக்குதுரை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

யோகிபாபு நாயகனாகவும் இனியா நாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தில் பாலசரவணன், மொட்ட ராஜேந்திரன், மகேஷ் சுப்பிரமணியம், செண்ட்ராயன், உள்பட பலர் நடிக்க உள்ளனர். ரவிவர்மா ஒளிப்பதிவில் தீபக் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்திற்கு கேஎஸ் மனோஜ் என்பவர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.