close
Choose your channels

உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' ரிலீஸ் தள்ளி போகிறதா?

Friday, February 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படம் மார்ச் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’நெஞ்சுக்கு நீதி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

பாலிவுட்டில் வெளியான ’ஆர்ட்டிக்கிள் 15’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தை தற்போது மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் ‘வலிமை’ படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் உதயநிதி, ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர். யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையில், தினேஷ்குமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.