close
Choose your channels

தனுஷின் அடுத்த பட ரிலீஸ் தேதியை அறிவித்த உதயநிதி ஸ்டாலின்!

Wednesday, May 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை உதயநிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

தனுஷ் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் ராஷிகண்ணா, பவானிசங்கர் மற்றும் நித்யா மேனன் ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும், ஐந்து வருடங்களுக்கு பிறகு அனிருத் மற்றும் தனுஷ் இணையும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் புரமோஷன் பேட்டி ஒன்றை அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் இந்த படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ‘தி ‘க்ரே மேன்’ என்ற திரைப்படம் ஜூலை 15ஆம் வெளியாக உள்ள இரண்டு வார இடைவெளியில் தனுஷ் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.