close
Choose your channels

சிம்பு-வெங்கட்பிரபு படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோ

Thursday, June 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுடன் மேலும் ஒரு ஹீரோ இணைந்துள்ளார்.

வெங்கட்பிரபு படம் என்றாலே அதில் அவருடைய டீம் நடிகர்களான பிரேம்ஜி, ஜெய், வைபவ், உள்ளிட்ட சிலர் இருப்பது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் சிம்புவுடன் வெங்கட்பிரபு இணையும் இந்த படத்தில் வைபவ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து வைபவ் தனது சமூக வலைத்தளத்தில், 'வெங்கட்பிரபு படத்தில் மீண்டும் ஒருமுறை நடிக்கவிருப்பது மகிழ்ச்சி. அதிலும் இந்த முறை டார்லிங் சிம்புவுடன் நடிக்கவுள்ளது கூடுதல் மகிழ்ச்சி' என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் சிம்பு-வெங்கட்பிரபு படத்தில் வைபவ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கிய 'சரோஜா', 'கோவா', 'மங்காத்தா', 'பிரியாணி' போன்ற படங்களில் நடித்தது மட்டுமின்றி 'கப்பல்', 'மேயாத மான்' போன்ற படங்களில் வைபவ் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.