close
Choose your channels

சிம்பு-வெங்கட்பிரபு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Thursday, June 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு-வெங்கட்பிரபு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'பில்லா 3' திரைப்படம் உருவாகவுள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்த நிலையில் சிம்புவும் வெங்கட்பிரபுவும் இணைவது தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் 'பில்லா 3' படம் அல்ல என்றும், இந்த படம் புதிய வித்தியாசமான கதையில் உருவாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: சகோதரர் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் என்னுடைய 9வது படம் உருவாகவுள்ளது. 2019ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படம் எந்த படத்தின் தொடர்ச்சி அல்ல. புதிய திரைக்கதையில் அமையும் இந்த படத்தின் நடிக்கும் நடிகர்கள், பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் டைட்டில் உள்பட அனைத்து விபரங்களும் மிக விரைவில் அறிவிக்கவுள்ளோம். சூப்பர் த்ரில் படமான இந்த படத்திற்கு உங்கள் வாழ்த்துக்களை வேண்டுகிறோம்' என்று டுவீட் செய்துள்ளார்

இந்த படம் அஜித்துக்கு ஒரு 'மங்காத்தா' போல் சிம்புவுக்கு அமைய வேண்டும் என்றும் சிம்புவின் முழு திறமைகளை வெளிக்கொண்டு வரும் படமாக இது இருக்க வேண்டும் என்றும் சிம்பு ரசிகர்கள் இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 'மங்காத்தா' படத்திற்கு இணையாக இந்த படம் அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.