close
Choose your channels

கமல் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கவில்லை: டெல்லி கணேஷ் பேட்டி!

Thursday, August 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் மற்றும் கமல்ஹாசன், ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டார்

குறிப்பாக ’மைக்கேல் மதன காமராஜன்’ படம் தான் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் அந்த படத்தின் இரண்டாம் பாகம் ’லண்டனில் காமேஸ்வரன்’ என்று எடுப்பதாக திட்டம் இருந்ததாகவும், ஆனால் சில எதிர்பாராத காரணங்களால் அந்தப் படம் உருவாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் கமலஹாசன் அரசியலுக்கு திடீரென வருவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஆனால் அவருடைய முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்று கமலஹாசன் போன்றவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் அஜித் மற்றும் விஜய் குறித்து டெல்லி கணேஷ் கூறியபோது அஜித்தாவது ஓரளவுக்கு பேசுவார் என்றும்,ஆனால் விஜய் பேசவே மாட்டார் மிகவும் அமைதியானவர் என்றும் தெரிவித்தார், நடிகர் டெல்லி கணேஷ் முழு பேட்டி இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.