close
Choose your channels

சிவாஜியுடன் நடித்த தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் காலமானார்!

Tuesday, October 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவாஜி கணேசன் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்.

ஸ்ரீதர் இயக்கிய ’வெண்ணிற ஆடை’ என்ற திரைப்படத்தில் கடந்த 1965ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த், அதன் பின்னர் நாணல், எதிர்நீச்சல், நவகிரகம், நூற்றுக்கு நூறு, அன்னை வேளாங்கண்ணி, ஞான ஒளி, வசந்தமாளிகை, கோமாதா என் குலமாதா உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான பைரவி படத்தில் வில்லனாக நடித்தவர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் நடித்த ’காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தில் நாயகியின் தந்தையாக இவர் நடித்து இருப்பார் என்பதும், இவர் கடந்த 2009ஆம் ஆண்டு குடியரசு என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

82 வயதான ஸ்ரீகாந்த் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.