close
Choose your channels

ஒரே நாளில் வெளியாகிறதா 'வேட்டையன்' 'கோட்' பட அப்டேட்கள்? ஒரு டிரெண்ட் போட்டி  இருக்குது..!

Wednesday, March 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜய் ‘கோட்’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரே நாளில் ‘வேட்டையன்’ படத்தின் டீசர் மற்றும் ‘கோட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரஜினி விஜய் ரசிகர்களால் சமூக வலைதளத்தில் இரண்டு போட்டி டிரெண்ட்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் , ஞானவேல் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வேட்டையன்’. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ‘வேட்டையன்’ படத்தின் டீசர் வீடியோ தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதே தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாக படக்குழுவினர் வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.

ஒரே நாளில் நான் 'வேட்டையன்’ டீசர் மற்றும் ‘கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானால் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதோடு, இரண்டு படங்களின் ஹேஷ்டேக்குகள் போட்டி போட்டுக் கொண்டு சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.