close
Choose your channels

விக்னேஷ் சிவனின் 'காதலர் தின' அறிவிப்பு இதுதான்!

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என சற்று முன்னர் விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார் என்பதை பார்த்தோம். அந்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் சிங்கிள் பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் வெளிவரும் என்று விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த சிங்கிள் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பாடலை விக்னேஷ் சிவனே எழுதியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.

லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.